tamilnadu

img

திருமணம் செய்ய மாட்டார்கள்; ஆனால் கற்பழிப்பார்கள்... இதுதான் பாஜக தலைவர்களின் யோக்கியதை

ராஞ்சி:
பெண்களுக்கு அச்சுறுத்தலாக திகழும் பாஜக-வினரை தோற்கடிக்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன், மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தின், பக்கூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப்பொதுக்கூட்டத்தில், இவ்வாறு கூறியிருக்கும் ஹேமந்த் சோரன் “நாட்டில் பெண்கள் தீக்குளிக்கும் அளவிற்கு நிலைமை போயிருப்பதற்கு பாஜக தலைவர்களும் ஒரு காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.“பாஜக தலைவர்கள் பெரும் பாலும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள்; ஆனால், காவி உடை அணிந்துகொண்டே, அவர்கள் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள் ளாக்குவார்கள்” என்று சாடியுள்ளார்.மேலும், “இவ்வாறு பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் பாஜக தலைவர்களுக்கு ஜார்க்கண்ட் மாநில மக்கள் வாக்களிக்கக் கூடாது” என்றும் சோரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜார்க்கண்ட்டில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருடன் பிரதமர் மோடி ஒரேமேடையில் ஒன்றாக கைகோர்த்து வாக்கு சேகரித்தது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்பிரியங்கா காந்தியும் அண்மையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;